பிரித்தானியாவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் மீது லேசர் தாக்குதல்! நடுவானில் விமானிக்கு நேர்ந்த கதி
பிரித்தானியாவிலிருந்து இஸ்ரேல் புறப்பட்ட விமானம் மீது லேசர் தாக்குதல் நடந்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திங்கட்சிழமை லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து டெல் அவிவ் புறப்பட்ட விர்ஜின் அட்லாண்டிக் பயணிகள் விமானம் மீதே லேசர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
லேசர் தாக்குதலால் விமானி ஒருவருக்கு கண் பார்வையில் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து, விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் அதவாது பிரான்ஸ் தலைநகர் பாரிஸை நெருங்கும் போது விமானக்குழுவினர் அவசரம் என கட்டுப்பாட்டு அறைக்கு சிக்னல் அனுப்பியுள்ளனர். இதனையடுத்து, விமானம் மீண்டும் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு திரும்பியுள்ளது.
முன்னெச்சரிக்கையாக விமானக்குழுவினரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து உள்ளூர் பொலிசாரிடமும், பிரித்தானியா விமானப்போக்குவரத்து ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் விமானம் அல்லது விமானி மீது லேசர் தாக்குதல் தாக்குதல் நடத்தும் எந்தவொரு நபரும் அபராதம் அல்லது அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைவாசம் போன்ற கடுமையான தண்டனைகளை சந்திக்க நேரிடும் என விமானப்போக்குவரத்து ஆணையத்திம் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லேசர் தாக்குதலுக்கு காரணமான நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.