2 ஆண்டுகளுக்கு பின் இலங்கை டெஸ்ட் அணிக்கு திரும்பும் முக்கிய வீரர்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் சுழற்பந்து வீச்சாளர் எம்புல்டேனியா மீண்டும் இடம்பிடித்துள்ளார்.
டெஸ்ட் தொடர்
நவம்பர் 27ஆம் திகதி இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
இதற்கான 17 பேர் கொண்ட இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தனஞ்செய டி சில்வா இந்த அணிக்கு தலைமை தாங்குகிறார்.
9 துடுப்பாட்ட வீரர்கள், மூன்று சிறப்பு சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் களமிறங்குகின்றனர்.
லசித் எம்புல்டேனியா
மேலும், இடக்கை சுழற்பந்து வீச்சாளர் லசித் எம்புல்டேனியா (Lasith Embuldeniya) இலங்கை டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளது அணிக்கு பலம் சேர்க்கிறது.
28 வயதான எம்புல்டேனியா கடைசியாக அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2022ஆம் ஆண்டில் விளையாடினார்.
இதுவரை 17 டெஸ்ட்களில் விளையாடியுள்ள எம்புல்டேனியா 71 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் ஐந்து ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்தியுள்ளார்.
அணி விபரம்:
- தனஞ்செய டி சில்வா
- பதும் நிசங்கா
- திமுத் கருணாரத்னே
- தினேஷ் சண்டிமல்
- ஏஞ்சலோ மேத்யூஸ்
- குசால் மெண்டிஸ்
- கமிந்து மெண்டிஸ்
- ஒஷாடா பெர்னாண்டோ
- சதீரா சமரவிக்ரமா
- பிரபத் ஜெயசூரியா
- நிஷான் பெய்ரிஸ்
- லசித் எம்புல்டேனியா
- மிலன் ரத்னயகே
- அசிதா பெர்னான்டோ
- விஷ்வா பெர்னாண்டோ
- லஹிரு குமாரா
- கசுன் ரஜிதா
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |