ஐபிஎல் 2022! மீண்டும் மிரட்ட போகும் இலங்கை ஜாம்பவான் மலிங்கா... ரசிகர்கள் உற்சாகம்
ஐபில் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
2022 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 26ஆம் திகதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் பல ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்து செயல்பட்ட இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்கா இந்தாண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து ராஜஸ்தான் அணியின் நிறமான பிங்க் நிற உடையுடன் மலிங்கா இருக்கும் புகைப்படத்தை அணி நிர்வாகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. மேலும் மலிங்கா தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர் என தெரிவித்துள்ளது.
பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள மலிங்காவின் பதிவில், மீண்டும் ஐபிஎல்லுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக திரும்பியுள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
மலிங்கா மீண்டும் ஐபிஎல்லுக்கு பயிற்சியாளராக திரும்பியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.
Back in @IPL as the Fast Bowling Coach of @rajasthanroyals ??
— Lasith Malinga (@ninety9sl) March 11, 2022
Excited to join #RoyalsFamily and @KumarSanga2 ?
Halla Bol?#TATAIPL2022 #CricketTogether https://t.co/mJYeqNn5On