என்னால் இப்போதும் முடியும்...டி20 ஓய்வு குறித்த கேள்விக்கு லசித் மலிங்கா கொடுத்த சரியான பதிலடி!
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா தான் எப்போது ஓய்வு பெறுவேன் என்பது கூறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
கடந்த 2004-ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணிக்காக அறிமுகமாகிய லசித் மலிங்கா, 30 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 84 டி20 போட்டிகள் விளையாடியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 500-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவர், கடந்த ஆண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த மலிங்கா, தற்போது வரை டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இருப்பினும், இலங்கை அணிக்காக கடந்த மார்ச் மாதம் முதல் இவர் ஒரு சர்வதேச போட்டிகளில் கூட விலையாடவில்லை. இதன் காரணமாக இவரது ஓய்வு குறித்த பேச்சு எழும்பியது.
இது குறித்து தற்போது மலிங்கா அளித்துள்ள பதிலில், என்னால் இப்போதும் டி20 கிரிக்கெட்டில் 24 பந்துகளை எளிதாக வீச முடியும் சொல்லப்போனால் நான் 200-க்கும் மேற்பட்ட பந்துகளை கூட வீசுவேன்.
ஆனாலும், முன்பு போல் என்னுடைய உடற் தகுதியை தற்போது என்னால் நிரூபிக்க முடியவில்லை.
ஏனெனில் நான் வீட்டில் இருப்பதால் அதை என்னால் செய்ய முடியவில்லை இருந்தாலும் என்னால் சர்வதேச போட்டிகளில் தற்போதும் விளையாட முடியும். இலங்கை கிரிக்கெட் நிர்வாகமும் என்மீது நம்பிக்கை வைத்து என்னை விளையாட வைக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.