ஐபிஎல் 2022! மும்பை அணியை விட்டு வேறு அணிக்கு சென்றது குறித்து மனம் திறந்த மலிங்கா
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பயிற்சியாளராக சென்றது குறித்து லசித் மலிங்கா மனம் திறந்துள்ளார்.
மும்பை அணியின் தூணாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இலங்கை ஜாம்பவான் மலிங்கா இந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், இது எனக்கு புதிய பொறுப்பு. இளம் வீரர்களுக்கு எனது அனுபவத்தை சொல்லி தருவது தான் என் வேலை.
மும்பை அணியில் இந்த பணியை தான் செய்தேன். இப்போது ராஜஸ்தான் அணிக்கு செய்கிறேன். மும்பை அணியில் இருந்த போதே சங்ககாரா என்னை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அழைத்தார்.
அப்போது கொரோனா, பயோ பபுள் போன்ற காரணத்தால் செல்லாமல் மனைவி, குழந்தையுடன் நேரத்தை செலவு செய்தேன். ஆனால் இப்போது இலங்கை அணிக்கும் இதே பணியை செய்வதால், சங்ககாரா அழைப்பை ஏற்று கொண்டேன்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பவுல்ட், கொல்டர் நைல் என 2 அதிவேக பந்துவீச்சாளர்களும், அவர்களுக்கு பக்க பலமாக பிரஷித் கிருண்ணா, நவதீப் சைனி ஆகியோரும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திறமையான வீரர்கள். ரசிகர்கள் பெருமைப்படும் வகையில் எங்கள் அணி செயல்படும் என கூறியுள்ளார்.