மீண்டும் இலங்கை அணிக்காக ஜாம்பவான் லசித் மலிங்கா! ரசிகர்கள் உற்சாகம்
Aussie Cricket League தொடரில் விளையாடும் இலங்கை அணியின் பந்துவீச்சு ஆலோசகராக ஜாம்பவான் லசித் மலிங்கா இணைந்துள்ளார்.
Aussie Cricket League T20 தொடரில் அவுஸ்திரேலியா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட 6 ஆணிகள் பங்கேற்கின்றன. இதில் இலங்கை XI அணியின் mentorராக லசித் மலிங்கா செயல்படவுள்ளார்.
லசித் மலிங்காவின் டுவிட்டர் பதிவில், இலங்கை XI இன் பந்துவீச்சு mentorராக ஆஸி கிரிக்கெட் லீக் T20 இல் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். போட்டிகளில் விளையாடும் இளம் வீரர்களுக்கு உதவ மிகவும் விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
I’m excited to join the Aussie Cricket League T20 as the bowling mentor of ACL Sri Lanka XI???
— Lasith Malinga (@malinga_ninety9) December 12, 2022
I would love to help the young players playing in the tournament?#ACLT20
வேகப்பந்து வீச்சு ஜாம்பவான லசித் மலிங்கா ஒருநாள் போட்டிகளில் 330 விக்கெட்களும், டெஸ்டில் 101 விக்கெட்களும், டி20 போட்டிகளில் 107 விக்கெட்களும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.