ஸ்டெம்பை தெறிக்கவிட்ட லசித் மலிங்கா! எப்பவுமே கெத்து தான்... வைரலாகும் வீடியோ
லசித் மலிங்கா ஸ்டெம்பை தெறிக்கவிட்ட வீடியோவை வைரலாகியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 26ஆம் திகதி தொடங்கவுள்ளது. ஐபிஎல் அணிகளில் முக்கிய அணியாக இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்தனை ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக செயல்பட்டு வந்த அவர் இம்முறை ராஜஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர்களை வழிநடத்துகிறார்.
Lasith Malinga, he's still got it! ??#RoyalsFamily | #TATAIPL2022 | @ninety9sl pic.twitter.com/zvOVCQOsga
— Rajasthan Royals (@rajasthanroyals) March 20, 2022
இதையடுத்து வலைபயிற்சியின் போது தனது ஸ்டைலில் மலிங்கா பந்துவீசினார், பந்து ஸ்டெம்புகளை பதம் பார்த்தது. இந்த வீடியோவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதை பார்த்த ரசிகர்கள் மலிங்கா மலிங்கா தான், என்றுமே அவர் யார்க்கர் மன்னன் என்ற கெத்துடன் வலம் வருபவர், அவரின் பயிற்சியின் கீழ் ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.