இலங்கையின் தோல்வியின் ஏமாற்றமான முடிவு - லசித் மலிங்கா வருத்தம்
ஆசியக்கோப்பை தோல்வி குறித்து இலங்கை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா வருத்தம் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி படுதோல்வி
இந்திய அணிக்கு எதிரான ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. இதற்கு இலங்கை கேப்டன் ஷானகா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வேகப்பந்து ஜாம்பவான் லசித் மலிங்கா வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
AP
மலிங்கா வருத்தம்
அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'உற்சாகமான இறுதிப்போட்டியாக இருந்திருக்க வேண்டியது இலங்கை ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றமான முடிவு.
8வது ஆசியக்கோப்பை பட்டத்தை வென்றதற்காக இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். இந்த தொடரில் அவர்களின் செயல்திறனால் அவர்கள் எவ்வளவு சிறப்பான முடிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளதன் மூலம், வரவிற்கும் உலகக்கோப்பைக்கு அவர்கள் சிறந்த போட்டியாளர்களின் ஒருவராக இருப்பார்கள்.
இலங்கை அணி தொடர் முழுவதும் நிறைய விடயங்களை சரியாக பெற்றது, ஆனால் இன்று தங்களைப் பயன்படுத்தத் தவறிவிட்டது. சூழ்நிலையை அணுகி அதற்கேற்ப விளையாடும் திறன் எங்களுக்கு இன்னும் இல்லை.
ஆனால், சரியான திட்டங்களுடன் அதை அணுகினால் வெற்றிகரமான உலகக்கோப்பையை கைப்பற்ற முடியும் என்று நான் இன்னும் நம்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.
Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |