சுவிஸ் நாட்டவர்கள் 10 பேர் நாடுகடத்தல்: பின்னணி
சுவிஸ் நாட்டவர்கள் 10 பேர் இஸ்ரேலிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
சுவிஸ் நாட்டவர்கள் 10 பேர் நாடுகடத்தல்
ஹமாஸ் காசாவை பொறுப்பெடுத்துக்கொண்டதைத் தொடர்ந்து, காசா பகுதிக்கான போக்குவரத்தை இஸ்ரேல் தடை செய்தது.
2025ஆம் ஆண்டின் மத்தியப்பகுதியில், The Global Sumud Flotilla என்னும் பெயரில் உருவாக்கப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் அந்த தடையை உடைக்க முயன்றுவருகிறார்கள்.
அவ்வகையில், 44 நாடுகளைச் சேர்ந்த 500 சமூக ஆர்வலர்கள் 41 படகுகளில் சென்று அந்த தடையை உடைக்க முயன்றார்கள்.
அவர்களில், ஜெனீவா முன்னாள் மேயரான Rémy Pagani உட்பட, சுவிஸ் நாட்டவர்கள் சிலரும் அடங்குவர். அவர்கள் அனைவரையும் இஸ்ரேல் கடற்படை கைது செய்துள்ளது.
இந்நிலையில், அவர்களில் 10 பேரை இஸ்ரேல் அதிகாரிகள் நேற்று ஜோர்டான் நாட்டுக்கு நாடுகடத்தியுள்ளார்கள்.
ஜோர்டான் தலைநகரான அம்மானில் அமைந்துள்ள சுவிஸ் தூதரகம், அவர்களை இன்று சுவிட்சர்லாந்துக்கு அழைத்துவர உள்ளது.
ஏற்கனவே இஸ்ரேலால் நாடுகடத்தப்பட்ட சுவிஸ் நாட்டவர்கள் ஒன்பது பேர் கடந்த வாரம் சுவிட்சர்லாந்தை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |