ரஷித் கான், கில் அதிரடி... ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளித்த குஜராத்

Gujarat Titans Rajasthan Royals IPL 2024
By Arbin Apr 10, 2024 07:28 PM GMT
Report

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் ரஷீத் கான் கடைசி பந்தில் பவுண்டரி விளாசி வெற்றிபெற வைத்துள்ளார்.

3-வது அரை சதம்

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இதில் நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தெரிவு செய்தார்.

ரஷித் கான், கில் அதிரடி... ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளித்த குஜராத் | Last Ball Rajasthan Win Gujarat Titans

இதனையடுத்து ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 24 ஓட்டங்களிலும், பட்லர் 8 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் - ரியான் பராக் இருவரும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். அதிரடியாகவும் அதே நேரத்தில் கவனமாகவும் விளையாடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் 3-வது அரை சதத்தை பூர்த்தி செய்த ரியான் பராக் 76 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஹெட்மேயர், தனது பங்குக்கு 13 ஓட்டங்கள் சேர்த்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ஓட்டங்கள் குவித்தது.

ரஷித் கான், கில் அதிரடி... ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளித்த குஜராத் | Last Ball Rajasthan Win Gujarat Titans

ரியான் பராக் 76 ரன்களும், சஞ்சு சாம்சன் 68 ரன்களும் அடித்தனர். குஜராத் தரப்பில் உமேஷ் யாதவ், ரஷித் கான், மொகித் சர்மா தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதனையடுத்து 197 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடக்க வீரர்களாக கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் களமிறங்கினர்.

44 பந்துகளில் 72 ஓட்டங்கள்

அதிரடி காட்டிய இருவரும், தொடக்க விக்கெட்டுக்கு 64 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் சேர்த்த நிலையில் சாய் சுதர்சன் 35 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த மேத்யூ வேட்(4), அபினவ் மனோகர்(1), விஜய் ஷங்கர்(16) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

மறுபுறம் கில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர் 44 பந்துகளில் 72 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ராகுல் திவேட்டியா , ரஷீத் கான் இணைந்து அதிரடியாக விளையாடினர்.

ரஷித் கான், கில் அதிரடி... ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளித்த குஜராத் | Last Ball Rajasthan Win Gujarat Titans

இதனால் கடைசி ஓவரில் குஜராத் அணியின் வெற்றிக்கு 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை ராஜஸ்தான் அணியின் அவேஷ் கான் வீசினார். இதில் ரஷித் கான் 3 பவுண்டரிகளை விளாசி அணியை வெற்றி பெற செய்தார்.

11 பந்துகளை எதிர்கொண்ட ரஷித் கான் 24 ஓட்டங்கள் எடுத்தார். குஜராத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
மரண அறிவித்தல்
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US