தமிழகத்தில் SIR படிவம் ஒப்படைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது
தமிழகத்தில் SIR படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
இன்றுடன் நிறைவடைகிறது
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாவட்டங்கள், யூனியன் பிரதேசங்களில் SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நவம்பர் மாதம் 4ஆம் தேதி தொடங்கியது.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை கடந்த 4ஆம் திகதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதனைதொடரந்து, முதலில் 7 நாட்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
தொடர்ந்து 2வது முறையாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு கூடுதலாக 3 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் SIR படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம், இன்றுடன் நிறைவடைகிறது.

இன்றைக்குள் படிவத்தை பூர்த்தி செய்து வழங்கத்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 19ஆம் திகதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |