கருணைக்கொலை செய்யப்படுவதற்கு முன் நண்பர்களை சந்தித்த பிரித்தானிய பெண்: கடைசியாக கூறிய வார்த்தை
பல்வேறு உடல் உபாதைகளால் கஷ்டப்பட்டு வந்த பிரித்தானிய பெண்மணி ஒருவர், சுவிட்சர்லாந்தில் மருத்துவர்கள் உதவியுடன் தன் உயிரை விட்டார்.
கென்டைச் சேர்ந்த Dawn Voice-Cooper (76), சிறுவர்களுக்கான புத்தகங்கள் எழுதும் ஒரு எழுத்தாளர் ஆவார்.
அவருக்கு கடுமையான ஆர்த்ரைட்டிஸ், அடிக்கடி மூளையில் இரத்தக்கசிவு மற்றும் வலிப்பு நோய் ஆகிய பிரச்சினைகள் இருந்தன.
ஆகவே, அவர் மருத்துவர்கள் உதவியுடன் தன் உயிரைப் பிரிய முடிவு செய்தார்.
பிரித்தானியாவில் கருணைக்கொலை குற்றம் என்பதால், சுவிட்சர்லாந்துக்குச் சென்ற Cooper, அங்குள்ள ஒரு மருத்துவமனையில் தன் உயிரை விட்டார்.
தனது உயிர் பிரியும் முன், கடைசியாக தனது நண்பர்களை ஆரத்தழுவிக்கொண்ட Cooper, ஒரு கோப்பை ஷாம்பெய்ன் அருந்திவிட்டு, தனக்குப் பிடித்த ஒரு பாடலைக் கேட்டபின், தன் நண்பர்களுக்கும், மருத்துவர்களுக்கும் நன்றி என்று கூறிவிட்டு ஆழ்ந்த தூக்கத்துக்குச் சென்றார். தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.
Cooper, கருணைக்கொலைக்கு ஆதரவாக நீண்ட காலமாக குரல் கொடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.