முடிந்தால் என்னைப் பிடி! இரத்தத்தில் கடிதம் எழுதிய கொலையாளிக்கு மரண தண்டனை
அமெரிக்காவில் கடைசி மேல்முறையீடு மனு நிராகரிக்கப்பட்டதால், கொலையாளி ஒருவர் மரண தண்டனையை எதிர்கொள்கிறார்.
கொடூர கொலையாளி
தென் கரோலினாவைச் சேர்ந்த ஸ்டீவன் பிரையன்ட் (44) என்ற நபர், 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ச்சியான கொடூர கொலைகளை செய்ததால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இவர் 2004ஆம் ஆண்டு 8 நாட்கள் குற்றச் சம்பவத்தில் நான்கு பேரை சுட்டுக் கொன்றதாக ஒப்புக்கொண்டார். இதன் காரணமாக 2008ஆம் ஆண்டு முதல் அவர் மரண தண்டனையில் தவித்து வருகிறார். 23 வயதிலேயே இவர் இந்த கொடூரங்களை செய்திருக்கிறார்.
குறிப்பாக, "இரண்டு வாரங்களில் நான்காவது நபர் பாதிக்கப்பட்டுள்ளார், முடிந்தால் என்னைப்பிடி" என்று அவரின் இரத்தத்தில் எழுதி விட்டுச் சென்றிருக்கிறார்.
மரண தண்டனை முறையைத் தெரிவு செய்ய அவகாசம்
இந்த நிலையில் பிரையன்ட்டின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டனர். ஆனால், உச்ச நீதிமன்றத்தால் பிரையான்டின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து வருகிற நவம்பர் 14ஆம் திகதி பிரையன்டிற்கு மரண தண்டனை விதிக்கப்படும். அவர் தனது மரண தண்டனை முறையைத் தெரிவு செய்ய அக்டோபர் 31ஆம் திகதி வரை அவகாசம் உள்ளது. அவர் மரண ஊசி, துப்பாக்கிச்சூடு அல்லது மின்சார நாற்காலி போன்றவற்றில் ஒன்றை தெரிவு செய்யலாம்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் மரண தண்டனைகளை மாநிலம் மீண்டும் தொடங்கியதில் இருந்து, தென் கரோலினாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழாவது கைதியாக பிரையன்ட் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |