தேனி மண்ணில் அடக்கம் செய்யவுள்ள பவதாரிணியின் உடல் (நேரலை)
மறைந்த பின்னணி பாடகி பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு, தற்போது தேனி மண்ணில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
தேனி மண்ணில் அடக்கம்
இசையமைப்பாளர் இளையராஜவின் மகளும் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் சகோதரியுமானவர் பாடகி பவதாரிணி.
புற்றுநோய் காரணமாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், திடீரென்று சிகிச்சை பலனின்றி இலங்கையில் காலமானார்.
வியாழக்கிழமை(25) மாலை 5.30 மணியளவில் உயிரிழந்த பாடகி பவதாரிணியின் உடல் விமானம் மூலம் நேற்று சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் தியாகராய நகரில் அமைந்துள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் சொந்த ஊரான தேனிக் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் தற்போது தேனி மண்ணில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |