பிரித்தானியாவின் கடைசி மீட்பு விமானம் இன்று புறப்படுகிறது; ஆப்கானிஸ்தானில் மீட்புப் பனி இன்றோடு நிறைவு
ஆப்கானிஸ்தானில் இருந்து பிரித்தானிய குடிமக்களை வெளியேற்றும் மீட்புப்பணி இன்றுடன் முடிவடையும் என்று பிரித்தானியாவின் ஆயுதப் படைத் தலைவர் கூறினார்.
காபூல் விமான நிலையத்தை குறிவைத்து ஐ.எஸ்.ஐ.எஸ்-கே தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமாய் முன்னெடுத்த கொடூர தற்கொலை வெடிகுண்டு தாக்குதலானது ஆப்கானிஸ்தானில் இருந்து பிரித்தானியா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மீட்பு நடவடிக்கைகளை மொத்தமாக சீர்குலைத்துள்ளது.
நேற்றைய தாக்குதலுக்கு பின்னர் பிரித்தானியா அதிரடியாக மீட்பு நடவடிக்கையை சனிக்கிழமையுடன் முடித்துக் கொல்வதாக அறிவித்தது.
அதன்படி, பிரித்தானியாவின் ஆயுதப் படைத் தலைவர் ஜெனரல் சர் நிக் கார்ட்டர், மீட்பு பணியின் இறுதி கட்டங்கள் 'திட்டத்தின் படி நடக்கிறது' என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், இறுதி விமானம் புறப்படும் போது, பிரித்தானியாவின் மீள்குடியேற்றத் திட்டத்திற்குத் தகுதியான சுமார் 1,100 ஆப்கானியர்கள் மற்றும் சுமார் 150 பிரித்தானியர்கள் இன்னமும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இது குறித்து, ஜெனரல் சர் நிக் கார்ட்டர் பேசுகையில் "எங்களால் எல்லோரையும் வெளியே கொண்டு வர முடியவில்லை, அது இதயத்தை உடைக்கிறது, மேலும் சில சவாலான முடிவுகள் எடுக்கப்பட நேரிடலாம்" என்று அவர் கூறினார்.
