கடந்த வார டிரண்டில் இருந்த டாப் 10 ஸ்மார்ட் போன்கள் என்னென்ன தெரியுமா? இதோ விலையுடன் முழு விபரம்
தற்போது இருக்கும் உலகில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது.
இதன் காரணமாக ஸ்மார்ட் போன் தயாரிப்புகளும் அதிகரித்து வருகின்றன. முன்பெல்லாம் குறிப்பிட்ட பிராண்ட நிறுவனங்களின் செல்போன்கள் மட்டுமே மக்களிடம் பெரிய அளவில் பேசப்பட்டது.
ஆனால், தற்போது அந்த நிறுவனங்களை எல்லாம் உடைக்கும் அளவிற்கு பல ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் சந்தைக்கு வந்துவிட்டன. சமீபத்தில் POCO நிறுவனத்தால், வெளியான போன்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
அதன் படி கடந்த வாரத்தில், மக்களால் அதிகம் விரும்பப்பட்டு, பேசப்பட்டு டிரண்டிங்கில் இருந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவலை பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.
இதில் முதல் இடத்தில், Xiaomi Redmi Note 10 Pro உள்ளது. இதன் ஆரம்ப வில்லை 18,999-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் யாரும் எதிர்பார்க்காத Tecno Phantom X ஸ்மார்ட் போன் உள்ளது. இதைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் Xiaomi Redmi Note 10 நான்காவது இடத்தில் Xiaomi Poco X3 Pro அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன.
கடந்த வார டிரண்டில் இருந்த டாப் 10 ஸ்மார்ட் போன்கள்
- Xiaomi Redmi Note 10 Pro(ஆரம்ப வில்லை 18,999 ரூபாய்)
- Tecno Phantom X(அடுத்த மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளதால், விலை இன்னும் தெளிவாக தெரியவில்லை)
- Xiaomi Redmi Note 10(ஆரம்ப விலை 12,999 ரூபாய்)
- Xiaomi Poco X3 Pro(ஆரம்ப விலை 18,999 ரூபாய்)
- Xiaomi Mi 11 Lite(ஆன்லைனில் மட்டும் தற்போது ஆரம்பவில்லை 21,999 ரூபாய் மற்றும் 23,999 விலைக்கு விற்கப்படுகிறது)
- Samsung Galaxy S21 Ultra 5G(ஆரம்ப விலை 93,700 ரூபாய்)
- Samsung Galaxy A52 (6GBRAM+128 Internal Storage ஆரம்ப விலை 26,499 ரூபாய்)
- Xiaomi Poco F3( (அடுத்த மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளதால், இதன் விலை 30,190 ரூபாய் என்று எதிர்பார்க்கப்படுகிறது)
- OnePlus Nord CE 5G(ஆரம்ப விலை தற்போதைக்கு 22,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது)
- Samsung Galaxy A32 (ஆரம்ப விலை 20,349 ரூபாய்க்கு விற்கப்படுகிறது)