விமான சக்கரத்திலிருந்து விழுந்து இறந்த இளைஞர்... கடைசியாக பேசிய வார்த்தைகள்: நினைவுகூரும் நண்பர்
தென்னாப்பிரிக்காவிலிருந்து ஒரு நல்ல வாழ்வைத் தேடி பிரித்தானியா நோக்கி புறப்பட்ட நண்பர்களில் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழக்க, அவர் கூறிய கடைசி வார்த்தைகளை நினைவுகூறுகிறார் அவருடன் பயணித்த அவரது நண்பர்.
Themba Cabeka (31)ம் அவரது நண்பர் Carlito Valeம் தென்னாப்பிரிக்காவிலிருந்து பிரித்தானியா நோக்கி புறப்பட்ட விமானம் ஒன்றின் சக்கரத்துக்குள் ஏறி மறைந்துகொண்டிருக்கிறார்கள்.
போதுமான ஆக்சிஜன் இல்லாமல், சுமார் 11 மணி நேரம், 10,000 கிலோமீற்றர் கடந்துவந்தும், ஹீத்ரோ விமான நிலையத்தை அடைந்தபோது, விமானம் தரையிறங்கும் முன்னரே இருவரும் வெவ்வேறு இடங்களில் விழுந்துள்ளார்கள்.
அதில் Carlito ஒரு கட்டிடத்தின் கூரை மீது விழுந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.சற்று நேரம் கழித்து Thembaவும் விமான ஓடுபாதையிலேயே விழுந்துள்ளார்.
விழுந்ததில் அவரது ஒரு கால் நொறுங்கிவிட்டதால், அதை அகற்றவேண்டியதாகிவிட்டது.அத்துடன், போதுமான ஆக்சிஜன் இல்லாமலிருந்ததால், ஆறு மாதங்கள் கோமா நிலையிலேயே இருந்துள்ளார் Themba.
Thembaவுக்கு புகலிடம் அளிக்கப்படவில்லை என்றாலும், நாட்டில் தங்க அவருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள், தெருவோரம் குளிரில் அமர்ந்திருந்த Thembaவை, Gabriel Frood (21) என்ற மாணவர் கண்டிருக்கிறார்.
அவர் Thembaவுக்காக பணம் சேகரித்து அவருக்கு செய்த உதவியால் தற்போது வாழ முயற்சி செய்து வரும் Themba, இனி ஒருபோதும் விமான சக்கரத்தில் ஏறுவது போன்ற தவறை செய்யமாட்டேன் என்கிறார்.
தானும் தன் நண்பர் Carlitoவும் விமான சக்கரத்தில் பயணிக்கும்போது, ஹீத்ரோ விமான நிலையம் நெருங்கும் நிலையில், ’நாம் நினைத்தது போலவே வந்து சேர்ந்துவிட்டோம்’ என்று கூறினாராம் Carlito.
ஆனால், அதற்குப்பின் Themba நினைவிழந்துவிட, நண்பர் விழுந்து இறந்தது தெரியாமலே போய்விட, இன்றும் Carlito கூறிய கடைசி வார்த்தைகளை சோகத்துடன் நினைவுகூறுகிறார் Themba.

