சீனாவுடன் நெருக்கம் காட்டும் கனடா பிரதமர்: பழைய கதை என்ன தெரியுமா?
Carney said last year during a leaders' debate that China is the biggest security threat to Canada: இன்று சீனாவுடன் நெருக்கம் காட்டும் கனடா பிரதமர், கடந்த ஆண்டு, சீனாதான் கனடாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் என கூறியிருந்தார்.
கனடாவும் சீனாவும் மேலும் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்ள இருக்கின்றன. கனடாவுடன் நெருக்கம் காட்டிவருகிறார் கனடா பிரதமரான மார்க் கார்னி.
ஆனால், பழையதை மறக்கவேண்டாம் என நினைவூட்டுகிறார்கள் சிலர்!
பழைய கதை என்ன தெரியுமா?
2018ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 1ஆம் திகதி, Huawei என்னும் சீன நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலரான மெங் (Meng Wanzhou) என்னும் பெண், வான்கூவர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கனடா எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

மோசடி வழக்கின் கீழ் அவரைக் கைது செய்ய அமெரிக்கா கேட்டுகொண்டதன்பேரில், கனடாவில் வைத்து கைது செய்யப்பட்டார் மெங்.
அதைத் தொடர்ந்து, சீனாவில் பணியாற்றிவந்த மைக்கேல் ஸ்பேவோர் மற்றும் மைக்கேல் கோவ்ரிக் என்னும் இரு கனேடியர்களை சீனா உளவு குற்றம் சாட்டி கைது செய்தது.

பல அரசியல் நாடகங்களுக்குப் பிறகு, 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி, கனடாவில் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருந்த மெங் விடுவிக்கப்பட்டார்.
அதே நாளில் கனேடியர்களான இரண்டு மைக்கேல்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த இரண்டு விடுதலைகளுக்கும் தொடர்பில்லை என சீனா கூறியது!
பழையதை மறக்கவேண்டாம்...
இந்நிலையில், 1,019 நாட்கள் சீன சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு மைக்கேல்களில் ஒருவரான மைக்கேல் கோவ்ரிக், கனடா, சீனா உறவுகளை தான் கவலையுடன் கவனித்துவருவதாக தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் கவனமாக வர்த்தகம் செய்யுமாறு அவர் கனடா பிரதமரான மார்க் கார்னியை வலியுறுத்தியும் உள்ளார்.

இந்த ஒப்பந்தங்களால் இருதரப்புக்கும் நிச்சயம் நன்மை உள்ளது என்று கூறும் கோவ்ரிக், அதே நேரத்தில் அந்த நன்மைகள் தங்களுடன் பெரிய பிரச்சினைகளைக் கொண்டு வராமல் கவனித்துக்கொள்வது அவசியம் என்கிறார்.
சீனா ஏற்கனவே முன்பு வரிகளை ஆயுதமாக பயன்படுத்தியுள்ளது என்பதை சுட்டிக் காட்டியுள்ள கோவ்ரிக், மீண்டும் சீனா அதைச் செய்யக்கூடும் என்றும் கூறியுள்ளார்.
அதேபோல, கனடாவை எப்போதும் விமர்சிப்பவரும், ட்ரம்பின் ஆலோசகருமான பீற்றர் நவாரோ என்பவர், சீனாவுடனான கார்னியின் நடவடிக்கைகள் மிக பயங்கரமாக புண்படுத்தக்கூடியவை என்கிறார்.
அத்துடன், சீனா கனடாவை உயிரோடு விழுங்கப்போகிறது என்றும் கூறியுள்ளார் அவர்.
ஆக, அமெரிக்கா மீதான கோபத்தில் சீனாவுடன் கார்னி காட்டும் நெருக்கம், பிரச்சினைகளைக் கொண்டுவந்துவிடக்கூடாது என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்!