லதா மங்கேஷ்கரின் கடைசி நிமிடங்கள் எப்படி இருந்தது? விவரிக்கும் மருத்துவர்
லதா மங்கேஷ்கருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அவரின் கடைசி நிமிடங்கள் குறித்து உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இந்திய திரைப்படம் மற்றும் இசைத்துறையில் மிகவும் மதிக்கப்படும் பிரபலங்களில் ஒருவரான லதா மங்கேஷ்கர் இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுகிறார்.
இவர் 36 இந்திய மொழிகளில் சுமார் 36,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அந்தவகையில் சாஹிப் பால்கே விருது முதல் சினிமாத்துறையின் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.
கொரோனா எனும் கொடூர அரக்கனிடம் சிக்கி 28 நாள் போராட்டத்திற்கு பிறகு கானக்குயில் லதா மங்கேஷ்கர் நேற்று முன்தினம் காலை அகால மரணம் அடைந்தார்.
இந்நிலையில் லதா மங்கேஷ்கரின் இறுதி நிமிடங்கள் குறித்து மருத்துவர் சம்தானி கூறியதாவது, கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் யாரையும் அதிகம் சந்திக்க முடியவில்லை.
மரணத்தை எதிர்த்து போராடும் நிலையில் கூட அவர் முகத்தில் புன்னகை துளி கூட குறையவில்லை. அந்தவகையில் அவர் இறப்பவதற்கு சில நிமிடம் முன்பு கூட அவர் முகத்தில் புன்னகை இருந்தது. என் வாழ்நாள் முழுவதும் அவருடைய புன்னகையை நான் நினைவில் வைத்திருப்பேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
லதாஜியின் உடல்நிலை மோசமடைந்த போதெல்லாம் நான் தான் அவருக்கு சிகிச்சை அளித்தேன். ஆனால் இந்த முறை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்று கூறியுள்ளார்.