கொரோனா தொற்று காலத்தில் இப்படி செய்தாரா லதா மங்கேஷ்கர்? வெளியான சுவாரசியமான தகவல்
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் நேற்றைய தினம் தனது 92வது வயதில் காலமானார். இச்செய்தி திரையுலகினரை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்தியாவின் நைட்டிங்கேல், மெலடி குயின் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் லதா மங்கேஷ்கர். கடந்த 80 ஆண்டுகளாக இந்திய மொழிகளில் இவர் சிறப்பாக பல பாடல்களை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த லதா மங்கேஷ்கர் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து சமூகவலைத்தளங்களில் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை பதிவிட்டு வந்தனர்.
இவர் தன்னுடைய குரலுக்காக மட்டுமின்றி சிறப்பான மனித நேயத்திற்காகவும் போற்றப்பட்டவர் லதா மங்கேஷ்கர். இவரது மனித நேயம் பல நேரங்களில் வெளிப்பட்டுள்ளது.
ஏனெனில் லதா மங்கேஷ்கர் கடந்த ஆண்டில் கொரோனா பாதித்தவர்களுக்காக தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்து வந்தார்.
அதுமட்டுமின்றி கடந்த 2016ல் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், அதையொட்டி தனது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தவிர்த்தார்.அந்த நேரத்தில் தனக்கு பிறந்தநாளுக்காக மலர்களை அனுப்புவதற்கு பதிலாக உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி செய்யவும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதேபோல 2018லும் அவர் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்தாகும்.