லதா மங்கேஷ்கர் மரணம்! இரண்டு நாள் துக்கம் அனுசரிப்பு- அரசின் முக்கிய அறிவிப்பு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலை 8.12 மணிக்கு காலமானார்.
கொரோனா சிகிச்சைக்கு பின்னர், பல உடல் உறுப்புகள் பாதிப்படைந்ததால் நேற்று லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமானது, இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Lata Didi’s songs brought out a variety of emotions. She closely witnessed the transitions of the Indian film world for decades. Beyond films, she was always passionate about India’s growth. She always wanted to see a strong and developed India. pic.twitter.com/N0chZbBcX6
— Narendra Modi (@narendramodi) February 6, 2022
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ஆர்.கே.சிங், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவையடுத்து, தேசிய அளவில் இன்று (06/02/2022), நாளை (07/02/2022) துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இதனால் நாடு முழுவதும் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். லதா மங்கேஷ்கர் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
Lata-ji’s demise is heart-breaking for me, as it is for millions the world over. In her vast range of songs, rendering the essence and beauty of India, generations found expression of their inner-most emotions. A Bharat Ratna, Lata-ji’s accomplishments will remain incomparable. pic.twitter.com/rUNQq1RnAp
— President of India (@rashtrapatibhvn) February 6, 2022