பிக்பாஸ் 8-ல் போட்டியாளராக நுழையும் மறைந்த பிரபல நடிகரின் மகன்: யார் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
முதல் சீசன் கொடுத்த வெற்றி அடுத்தடுத்து சீசன்கள் ஒளிபரப்பாக விரைவில் 8வது சீசன் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.
நிகழ்ச்சியை சுவாரசியம் குறையாமல் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதன் பின் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மறைந்த பிரபல நடிகரின் மகன் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் நுழையவுள்ளார் என்று கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |