இரவில் தாமதமாக தூங்கி காலையில் வெகுநேரம் கழித்து எழும் பழக்கம் கொண்டவர்களுக்கு! அதனால் ஏற்படும் ஆபத்துகள்
இரவில் கண்விழித்து தாமதாக தூங்கிவிட்டு அடுத்தநாள் காலையில் வெகுநேரம் கழித்து எழும் பழக்கம் சிலருக்கு இருக்கும்.
8 மணி நேரம் தூக்கம் அவசியம் என்ற நிலையில் அது குறிப்பிட்ட எந்த நேரம் என்பது மிக முக்கியமாகும்.
இரவு 10 முதல் அதிகாலை 6 மணி வரை என்பதே சரியான தூக்க ஒழுக்க முறை என்கின்றனர் மருத்துவர்கள்.
இரவில் நீண்ட நேரம் கழித்து தூங்கிவிட்டு காலையில் தாமதமாக எழுந்தால் ஏற்படும் பிரச்சினைகள்
ஆம் இதுதொடர்பாக ஊட்டச்சத்து முன்னேற்றத்துக்கான பத்திரிகை ஒரு ஆய்வை நடத்தியது.
அதில், இப்படியான தவறான தூக்க ஒழுக்கம் கொண்டிருப்பவர்களுக்கு, நேரத்துக்குத் தூங்கி நேரத்துக்கு எழுந்திருப்பவர்களைக் காட்டிலும் `டைப் 2' சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் அதிகம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தவறான தூக்க ஒழுக்கம் இருப்பவர்கள், உணவு விடயத்திலும் தவறான வாழ்வியலையே பின்பற்றுவார்கள் என்பதும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.
அதாவது இரவு நேரத்தில் உடலில் குளுக்கோஸ் சீராக சுரப்பதுதான் இயல்பு. ஆனால், நேரம் கழித்து சாப்பிட்டுத் தூங்குபவர்களுக்கு குளுக்கோஸ் மிகவும் அதிகமாக இருக்கும்.
இப்படி தினமும் ஆகும் பட்சத்தில் உடலில் பல சிக்கல்கள் உருவாகும்.