இலங்கை அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டம்! ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் முன்னேற்றம்
ஐசிசி வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன் தவான் 16வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது.
இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஷிகர் தவான், 712 புள்ளிகளுடன் 18வது இடத்தில் இருந்து 16வது இடத்துக்கு முன்னேறினார்.
இவர், இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 86 ரன்கள் விளாசினார். முதல் மூன்று இடங்களில் பாகிஸ்தானின் பாபர் ஆசம் (873 புள்ளி), இந்தியாவின் விராத் கோஹ்லி (848), ரோகித் சர்மா (817) நீடிக்கின்றனர்.
இலங்கை வீரர்களை பொறுத்தவரையில் குசல் பெரோரா 42வது இடத்திலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 47வது இடத்திலும் உள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.