திருமணமே செய்து கொள்ளாத லதா மங்கேஷ்கரின் சொத்து மதிப்பு எவ்வளவு? கசிந்த தகவல்
லதா மங்கேஷ்கரின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களின் வாரிசு யார் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.
'இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அழைக்கப்படும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் 92 வயதில் காலமானார். இசைக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட லதா, திருமணம் செய்து கொள்ளாமலேயே இறுதி வரையில் வாழ்ந்து வந்தார்.
25 ரூபாய் ஊதியத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய லதா, ஒரு பாடலுக்கு 40 லட்சம் ரூபாய் வரை வாங்கும் பிரபல பாடகியாக உயர்ந்தார். லதா மங்கேஷ்கரின் சொத்துக்களின் நிகர மதிப்பு சுமார் 370 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பையின் ஆடம்பரமான பகுதியில் பெடர் சாலையில் கட்டப்பட்ட 'பிரபுகுஞ்ச் பவன்'என்ற பங்களாவில் வசித்து வந்த லதா மங்கேஷ்கரின் வீடு, பல கோடி ரூபாய் மதிப்புடையது.
அழகான புடவைகள் மற்றும் நகைகள் அணிவதில் விருப்பம் கொண்ட லதா மங்கேஷ்கருக்கு கார்களும் மிகவும் பிடித்தமானது. பல விலையுயர்ந்த கார்களும் அவரின் சொத்தாக இருக்கின்றன.
கோடிக்கணக்கான விலைமதிப்புள்ள வீடு, விலைமதிப்பற்ற நகைகள் தவிர, அவரது பாடல்களின் ராயல்டி தொகை என இப்போது இருக்கும் சொத்துக்கள், மற்றும் ராயல்டி மூலம் கிடைக்கவிருக்கும் எதிர்கால வருமானம் என அனைத்துமே யாருக்கு கிடைக்கும் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.
அதன்படி லதா மங்கேஷ்கரின் சகோதரர் ஹிருதய்நாத் மங்கேஷ்கரே அவரின் சொத்துகளுக்கான வாரிசாக இருப்பார் என்று யூகிக்கப்படுகிறது. ஆனாலும் இது குறித்து உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை, விரைவில் இதற்கான அதிகாரபூர்வ பதில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.