தனது மகளை பிரிந்த தனுஷுக்கு செக் வைத்த லதா ரஜினிகாந்த்! கசிந்த தகவல்
நடிகர் தனுஷுக்கு லதா ரஜினிகாந்த் செக் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.
இதையடுத்து தனுஷ்தனது படங்களிலும், ஐஸ்வர்யா தனது பட வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதற்கிடையே சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளான ஐஸ்வர்யா, தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் மகள் ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷுக்கு லதா ரஜினிகாந்த், செக் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, தனக்கு தெரிந்த இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்ட லதா, இனி தனுஷுக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று கூறி வருவதாக செய்திகள்தெரிவிக்கின்றன.
அதோடு அவர் படங்களை தயாரிக்க, பணம் கொடுக்கக் கூடாது என்று சினிமா பைனான்ஸியர்களிடமும் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மனைவியை பிரிந்த தனுஷ் தனது கவனத்தை திசை திருப்பும் வகையில், படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நேரத்தில் அவருக்கு இப்படியொரு சோதனையா என வருத்தத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் ரசிகர்கள்.