95 ஆண்டுகால சாதனை முறியடிப்பு! கான்வே 178, லாதம் 137 ஓட்டங்கள் விளாசல்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 334 ஓட்டங்கள் குவித்தது.
டாம் லாதம், டெவோன் கான்வே
நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பே ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. 
நாணய சுழற்சியில் வென்று நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கியது. டாம் லாதம் மற்றும் டெவோன் கான்வே கூட்டணி மேற்கிந்திய தீவுகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியது.
இருவரும் அபார சதம் விளாசினர். இந்தக் கூட்டணியை பிரிக்க மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சாளர்கள் கடுமையாக போராடினர்.
ஒருவழியாக அணியின் ஸ்கோர் 323 ஆக உயர்ந்தபோது டாம் லாதம் (Tom Latham) ஆட்டமிழந்தார். அவர் 137 ஓட்டங்கள் (1 சிக்ஸர், 15 பவுண்டரிகள்) குவித்தார்.
334 ஓட்டங்கள் குவிப்பு
முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 334 ஓட்டங்கள் குவித்தது. டெவோன் கான்வே (Devon Conway) 178 ஓட்டங்களுடனும் (25 பவுண்டரிகள்), ஜேக்கப் டுஃபி 9 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
லாதம், கான்வே கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 323 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் 95 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளது.
இதற்கு முன்பு, 1930ஆம் ஆண்டில் ஸ்டீவி டெம்ப்ஸ்டர் மற்றும் ஜாக்கி மில்ஸ் கூட்டணி, நியூசிலாந்து அணிக்காக 276 ஓட்டங்கள் குவித்ததே முதல் விக்கெட்டுக்கு எடுத்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |