ரூ.60 ஆயிரத்திற்கும் குறைவான விலையில்.., முழு சார்ஜில் 140 கிமீ செல்லும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்
ஜூலியோ இ மொபிலிட்டி (Zelio E Mobility) நிறுவனமானது Gracyi Electric scooter-ன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது.
விலை எவ்வளவு?
புதிய Gracyi எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மொத்தம் 3 Variant-களில் கிடைக்கும். அதில் 60V/32Ah Gel battery variant ஆனது முழு சார்ஜில் 80-90 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்யும். இதன் விலை ரூ.54 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு வேரியன்ட்டான 72V/42Ah Gel battery variant ஆனது முழு சார்ஜில் 130-140 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்யும். இதன் விலை ரூ.58,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல இதன் top variant -ல் 60V/30Ah lithium-ion battery உள்ளது. இந்த ஸ்கூட்டரானது முழு சார்ஜில் 90-100 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்யும். இதன் விலை ரூ.66000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஜார்ஜிங்கை பொறுத்தவரை lithium-ion battery வேரியண்ட்டை ஒரு முறை முழுமையாக நிரப்புவதற்கு சுமார் 4 மணி நேரம் ஆகும்.
Gel battery வேரியண்ட்களை ஒரு முறை முழுமையாக நிரப்புவதற்கு சுமார் 8 மணி நேரம் ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |