ரஷ்ய நாட்டவர்கள் மீதான தடைகள் துவக்கம்: புடினுடன் தொடர்புடையவரின் சொகுசுக்கப்பலுக்கு நேர்ந்துள்ள கதி
உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது தடைகள் விதித்துவரும் நிலையில், தன் பங்குக்கு ஜேர்மன் அதிகாரிகளும் ரஷ்ய கோடீஸ்வரர்களுக்கெதிரான நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளனர்.
அதன்படி, புடினுக்கு நெருக்கமானவரான Alisher Usmanov என்னும் ரஷ்ய கோடீஸ்வரருக்கு சொந்தமான 600 மில்லியன் டொலர்கள் மதிப்புடைய சொகுசுக்கப்பல் ஒன்றை ஜேர்மன் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
512 அடி நீளமுடைய Dilbar என்னும் அந்த சொகுசுக்கப்பலை Hamburg துறைமுகத்திலிருந்து ஜேர்மன் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளார்கள்.
சில மாற்றங்கள் செய்வதற்காக அந்த கப்பல் ஜேர்மனியிலுள்ள கப்பல் கட்டும் துறைக்கு கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், அந்தக் கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அந்தக் கப்பலில் பணி செய்தவர்களும் நேற்று பணிக்கு வரவில்லை என Forbes பத்திரிகை தெரிவித்துள்ளது.
Alisher Usmanov மீது ஐரோப்பிய ஒன்றியமும் தடைகள் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.