இலங்கையிடம் அதை எதிர்பார்க்கிறோம்! அவர்தான் எங்களுக்கு சவால் - அயர்லாந்து கேப்டன்
மகளிர் இலங்கை அணியிடம் போட்டி நிறைந்த ஆட்டத்தை எதிர்பார்ப்பதாக அயர்லாந்து அணித்தலைவர் தெரிவித்துள்ளார்.
முதல் டி20 போட்டி
இலங்கை மற்றும் அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று டப்லினில் நடைபெறுகிறது.
இலங்கை அணியைப் பொறுத்தவரையில் கேப்டன் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் மிரட்டுவதால், அவர் அயர்லாந்து அணிக்கு சிம்மசொப்பனமாக விளங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லாரா டெலனி
இந்த நிலையில் அயர்லாந்து அணித்தலைவர் லாரா டெலனி (Laura Delany) கூறுகையில், "இலங்கைத் தொடரைப் பார்க்கும்போது நட்சத்திர வீராங்கனை சமரி அதப்பத்து முக்கிய சவாலாக இருப்பார். அவர் அணிக்கு முக்கிய வீராங்கனை என்பதை நாங்கள் அறிவோம்.
ஆனால், இலங்கையின் துடுப்பாட்ட வரிசையைப் பார்க்கும்போது எப்படி கடைசி 4,5 போட்டிகளில் விளையாடினார்கள் என்பதையும், அவர்கள் பல வீராங்கனைகள் பங்களிப்பை பெற்றுள்ளனர் என்பதையும் அறிவோம்.
அவர்களின் பக்கத்தில் ஒன்று அல்லது இரண்டு வீராங்கனை இல்லை என்பது எங்களுக்கு தெரியும். அதை நாங்கள் கவனிக்க வேண்டும். மிகவும் போட்டி நிறைந்த ஆட்டத்தை எதிர்பார்க்கிறோம். இது எங்கள் பலத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கிறது" என தெரிவித்துள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |