லாவா நிறுவனத்தின் அக்னி 5ஜி Smartphoneகள் இந்தியாவில் அறிமுகம்! வியக்க வைக்கும் அம்சங்கள்
இந்திய ஸ்மார்ட் ஃபோன் தயாரிப்பாளரான லாவா இன்டர்நேஷனல் நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட் ஃபோனான, லாவா அக்னி 5ஜி-யை அறிமுகப்படுத்தியுள்ளது.
தனது முதல் 5G- எனேபிள்ட் ஸ்மார்ட் ஃபோனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது லாவா நிறுவனம். கவர்ச்சிகரமான விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் ஃபோன் பல ஈர்க்க கூடிய அம்சங்களுடன் வருகிறது.
தங்கள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் ஃபோன் அறிமுகம் குறித்து பேசியுள்ள லாவா இன்டர்நேஷனல் லிமிடெட் தலைவர் மற்றும் வணிகத் தலைவரான சுனில் ரெய்னா, இந்த ஃபோன் இந்தியாவின் fire power. தொழில்நுட்ப துறையில் இந்தியாவும் இந்தியர்களும் எதையும் சாதிக்க முடியும் என்பதை இந்த Lava Agni 5G பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என கூறினார்.
நானோ டூயல் சிம் ஸ்லாட்டை கொண்டுள்ள Lava Agni 5G ஸ்மார்ட் ஃபோன் ஆண்ட்ராய்டு 11-ல் இயங்குகிறது. 90Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் ஹோல்-பஞ்ச் டிஸைனுடன் 6.78-இன்ச் ஃபுல் HD+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 810 SoC ப்ராசஸர் இடம் பெற்றுள்ளது.
8GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மூலம் இது பாதுகாப்பு பெற்றுள்ளது. கேமராவைப் பொறுத்தவரை, Lava Agni 5G-யின் பின்புறத்தில் குவாட் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுளது. இதன் பின்பக்கத்தில் 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா ஆகியவை அடங்கும்.
இந்தியாவில் Lava Agni 5G-யின் 8GB ரேம் + 128GB இண்டர்ன ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.19,999 ஆகும். ஆனால் முன்கூட்டியே வாங்குபவர்களுக்கு ரூ.2000 சிறப்பு தள்ளுபடியை லாவா நிறுவனம் வழங்குகிறது.