50MP AI கேமரா, 8GB ரேம், 5000mAh பற்றரி! இந்தியாவில் அதிரடி விலையில் Lava Shark ஸ்மார்ட்போன்
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியாக லாவா நிறுவனம், பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் லாவா ஷார்க் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன், 50 மெகாபிக்சல் AI மேம்படுத்தப்பட்ட பின்புற கேமரா, Unisoc T606 செயலி, 8GB வரை டைனமிக் ரேம் மற்றும் 5000mAh பற்றரி போன்ற அதிநவீன அம்சங்களை கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், AI புகைப்படம் எடுக்கும் அம்சங்கள், முக அங்கீகார அனுமதி மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
Lava Shark with 6.67" 120Hz display, 50MP camera, 5000mAh battery launched for Rs. 6999 https://t.co/06TnolsTs8 pic.twitter.com/ZD7u58Bqym
— FoneArena Mobile (@FoneArena) March 25, 2025
விலை மற்றும் கிடைக்கும் தன்மை
லாவா ஷார்க் ஸ்மார்ட்போனின் 4GB ரேம் மற்றும் 64GB சேமிப்பு திறன் கொண்ட மாடலின் விலை வெறும் ₹6,999 மட்டுமே என தெரியவந்துள்ளது.
லாவா நிறுவனம், இந்த ஸ்மார்ட்போனுக்கு 1 வருட உத்தரவாதத்தை வழங்குகிறது.
[VQWMYDS
ஸ்டெல்த் பிளாக்(Stealth Black ) மற்றும் டைட்டானியம் கோல்டு(Titanium Gold) ஆகிய இரண்டு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
தொழில்நுட்ப விவரக்குறிப்புகள்
திரை: 6.7-இன்ச் HD+ டிஸ்ப்ளே (720 x 1,612 பிக்சல்கள்), 120Hz புதுப்பிப்பு வீதம், 269ppi பிக்சல் அடர்த்தி கொடுக்கப்பட்டுள்ளது.
செயலி மற்றும் நினைவகம்: octa-core Unisoc T606 சிப்செட், 4GB ரேம், 64GB உள் சேமிப்பு, 4GB வரை விர்ச்சுவல் ரேம் விரிவாக்கம், 256GB வரை மைக்ரோ SD கார்டு ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது.
கேமரா அமைப்பு: 50 மெகாபிக்சல் AI பின்புற கேமரா, LED ஃபிளாஷ், 8 மெகாபிக்சல் முன் கேமரா, AI Mode, Portrait, Pro Mode, HDR ஆதரவு தரப்பட்டுள்ளது.
பற்றரி மற்றும் சார்ஜிங்: 5000mAh பற்றரி, 18W வயர்டு சார்ஜிங் (USB டைப்-C) வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் இணைப்பு: பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், முக அங்கீகார அனுமதி, டூயல் 4G VoLTE, புளூடூத் 5.0, Wi-Fi 802.11 b/g/n/ac மற்றும் IP54 தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பு ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |