நடுத்தர ஸ்மார்ட்போன் பிரிவில் களமிறங்கும் Lava Agni 3: சிறப்பம்சங்கள் என்னென்ன?
Lava, அதன் புதிய மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் Agni 3-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 9ம் திகதி முதல் அமேசானில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Heather Glass மற்றும் Pristine Glass என்ற இரண்டு அழகான நிறங்களில் Lava Agni 3 ஸ்மார்ட்போன் கிடைக்கும்.
Really feeling Proud For Lava
— Techno Ruhez (@AmreliaRuhez) October 4, 2024
Jo Hum itne salo se ek Indian Brand se Expect kar rahe the, ke kuch dhamaka karo, toh Lava ne actually kardiya ?
Hope Lava aise hi future me badhiya phones launch karte rahe?#LavaAgni3 pic.twitter.com/sB7FMTc3pT
8GB RAM மற்றும் 128GB சேமிப்புடன் இதன் அடிப்படை விற்பனை விலை ரூ20,999 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த தொகுப்பில் சார்ஜர் வழங்கப்படுவதில்லை.
ரூ. 22,999க்கு கிடைக்கும் Lava Agni 3 ஸ்மார்ட்போனில் சார்ஜர் வழங்கப்படுகிறது. அதே சமயம் 256GB சேமிப்பு மற்றும் சார்ஜருடன் கூடிய உயர்நிலை மாடலுக்கு ரூ.24,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
திரை: 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே 1200x2652 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 120Hz புதுப்பிப்பு விகிதத்துடன் கிடைக்கிறது.
செயல்திறன்: MediaTek Dimensity 7300X 8GB LPDDR5 RAM மற்றும் 8GB வரையிலான RAM அம்சம் வழங்கப்படுகிறது.
Lava Agni 3 looks promising, started testing it, will share my thoughts soon. Videos coming soon on @techniqued_blog #LavaAgni3 pic.twitter.com/nH0fl0noAa
— Nirmal TV (@nirmaltv) October 4, 2024
சேமிப்பு: 128GB அல்லது 256GB UFS 3.1 சேமிப்பு உள்ளது.(வெளிப்புற சேமிப்பு விரிவாக்கம் இல்லை)
கேமராக்கள்: மூன்று கேமரா மாடலை Lava Agni 3 கொண்டுள்ளது.(50MP main with OIS, 8MP ultra-wide, 8MP telephoto), முன்புறம் 16MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
பற்றரி: 66W வேகமாக சார்ஜிங் அம்சத்துடன் 5000mAh சக்தி வழங்கப்பட்டுள்ளது.
இயக்கம்: Android 14 மூன்று முக்கிய OS மேம்படுத்தல்கள் மற்றும் நான்கு ஆண்டுகள் பாதுகாப்பு உத்தரவாதத்துடன் கிடைக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |