ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள்
ரயிலில் இனிப்பு விற்கும் இந்த முதிய தம்பதியினர் குறித்து விவரங்கள் தெரிந்தால் சொல்லுங்கள் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லாரன்ஸ் வேண்டுகோள்
நடிகரும், சமூக சேவகருமான லாரன்ஸ் பல ஆண்டுகளாகவே ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார். எதுவும் இல்லாத மக்களை தேடி பிடித்து அவர்களுக்கு உதவி செய்வதிலும் பெயர் பெற்றவர் லாரன்ஸ்.
இந்நிலையில், சென்னை ரயிலில் இனிப்பு விற்பனை செய்யும் முதிய தம்பதியினர் குறித்து விவரங்கள் தெரிந்தால் சொல்லுங்கள் என்று ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார் லாரன்ஸ்.
அவர் அந்த பதிவில், " சென்னையில் 80 வயது முதியவரும் அவரது மனைவியும் இனிப்புகள் மற்றும் போலி தயாரித்து ரயில்களில் விற்பனை செய்து வருகின்றனர். அவர்களை பற்றிய தகவல் எனக்கு சமூக ஊடகங்கள் மூலம் கிடைத்தது.
அவர்களின் பயணத்திற்கு ஆதரவாக ரூ.1,00,000 நன்கொடை அளிக்க நான் தயாராக இருக்கிறேன், அது அவர்களுக்கு ஆறுதலையும் பலத்தையும் தரும் என்று நம்புகிறேன்.
அவர்களை தொடர்பைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன், ஆனால் முடியவில்லை. யாருக்காவது அவர்களின் விவரங்கள் தெரிந்தால், தயவுசெய்து என்னைத் தொடர்பு கொள்ளவும்.
நீங்கள் அவர்களை ரயிலில் பார்த்தால் இனிப்புகளை வாங்கி, உங்களால் முடிந்த எந்த வகையிலும் அவர்களுக்கு ஆதரவளிக்கவும்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |