இஸ்ரேலுக்கு ஆயுத உதவி வழங்கும் ஜேர்மனி மீது வழக்குத் தொடர்ந்துள்ள சட்டத்தரணி
இஸ்ரேல் காசா போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜேர்மனி ஆயுதங்கள் வழங்கியுள்ள நிலையில், ஜேர்மனிக்கு எதிராக மனித உரிமைகள் சட்டத்தரணி ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஜேர்மனி மீது வழக்குத் தொடர்ந்துள்ள சட்டத்தரணி
ஜேர்மனி வழங்கும் ஆயுதங்களைக் கொண்டு இஸ்ரேல் காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபடுகிறது என்பதை நம்புவதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன என்று கூறி, மனித உரிமைகள் சட்டத்தரணியான அலெக்சாண்டர் (Alexander Schwarz) என்பவர் ஜேர்மனி மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பெர்லினிலுள்ள பெடரல் நீதிமன்றம் ஒன்றில், European Center for Constitutional and Human Rights (ECCHR) என்னும் மனித உரிமைகள் அமைப்பின் சார்பில் அலெக்சாண்டர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஜேர்மனி, இஸ்ரேலுக்கு சிலவகை ஆயுதங்கள் மற்றும் கவச வாகனங்களுக்கான எஞ்சின்களை வழக்கிவருவதாக தெரிவித்துள்ள அலெக்சாண்டர், இஸ்ரேல் அவற்றைக் கொண்டு காசாவிலுள்ள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும், அவற்றை மனித இனத்துக்கெதிரான போர்க்குற்றங்கள் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சமீபத்தில் உறுதிசெய்துள்ளதாகவும் கூறுகிறார்.
போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாக தங்கள் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள இஸ்ரேல், தாங்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரை மட்டுமே குறிவைத்துவருவதாக தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |