இந்திய அணி பிளேயிங் லெவனிலிருந்து இந்த வீரரரை தூக்கிவிட்டு சிஎஸ்கே வீரரை சேர்க்க வேண்டும்! விவிஎஸ் லக்ஷ்மண் கருத்து
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய பிளேயிங் லெவனில் ஒரு வீரரை மாற்ற வேண்டும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான் சூப்பர் 12 போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்று சாதனை படைத்தது.
இப்போட்டியில் புவனேஷ்வர் குமார் 3 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்தார்.
இந்நிலையில் நியூசிலாந்து உடனான போட்டிக்கு முன் பேசிய முன்னாள் இந்நிய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண், இந்தியாவின் பிளேயிங் லெவனில் சிஎஸ்கே வீரரான ஷர்துல் தாக்கூரை சேர்க்க வேண்டும் என கூறினார்.
ஷர்துல் தாக்கூர் ரன்களும் அடிப்பார், விக்கெட்டுகளையும் எடுப்பார்.அதனால், நான் கண்டிப்பாக புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூருடன் விளையாடுவேன்.
புவனேஷ்வர் குமார் அனுபவமிக்க வீரர் தான், ஆனால் பிளேயிங் லெவனில் வீரர்கள் சமபலத்துடன் கலவையாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், நான் புவனேஷ்வரை விட தாக்கூருக்கு முன்னுரிமை கொடுப்பேன் என்று லக்ஷ்மண் கூறியுள்ளார்.