ஊழியர்களை பணி நீக்கம் செய்ய 8 ஆயிரம் கோடி செலவு: மெட்டா வெளியிட்ட தகவல்
மெட்டா நிறுவனத்தின் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய, 8 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்ததாக மெட்டா நிறுவனம் தகவலை வெளியிட்டுள்ளது.
ஊழியர்கள் பணி நீக்கம்
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற செயலிகளின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம், தொடர்ந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.
இந்நிலையில் மெட்டா நிறுவனம் 2023ஆம் ஆண்டின் காலாண்டு முடிவுகளை, பரிமாற்ற அறிக்கையில் சமர்ப்பித்துள்ளது. இதில் மெட்டா நிறுவனத்தின் பணி நீக்கத்திற்காக, செலவு செய்யப்பட்ட தொகையை பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிக்கையில் பணி நீக்கம் செய்ய ஊழியர்களுக்கு எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது, என்பது பற்றிய தகவல்களும் இடம் பெற்றுள்ளது.
8000 கோடி செலவு
இதன்படி ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள், இந்திய ரூபாயின் மதிப்பு படி 8000 கோடி செலவாகியிருப்பதாக, மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
@getty images
பணி நீக்க ஊதியம், பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு நிறுவனம் சார்பில் கொடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட இதர பலன்கள், இவையெல்லாம் சேர்த்து பல மில்லியன் டொலர்கள் செலவிட்டதாக மெட்டா கூறுகிறது.
மேலும் பணி நீக்க நடவடிக்கைக்கு பெரும் தொகை செலவிடப்பட்ட போதிலும், மெட்டா நிறுவன வருவாயில் இது நல்ல பலன்களை ஏற்படுத்தியுள்ளது.
பணி நீக்க நடவடிக்கைகள் காரணமாக 2023 முதல் காலாண்டில் மட்டும், மெட்டா நிறுவன வருவாய் 28.65 பில்லியன் டொலர்கள் ஆகும். இது முந்தைய ஆண்டை ஒப்பிடும் போது மூன்று சதவீதம் அதிகம் என தெரியவந்துள்ளது.
மேலும் கடந்த மார்ச் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் பணிநீக்க நடவடிக்கைகளை நிறைவு செய்து, டேட்டா சென்டர் மறுகட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மெட்டா தெரிவித்துள்ளது.