பிரான்ஸ் தேர்தல்... தீவிர வலதுசாரிகளின் பின்னடைவுக்கு என்ன காரணம்: வெளிவரும் பின்னணி
பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில், ஆட்சி அமைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தீவிர வலதுசாரிகள் கூட்டணி தற்போது மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டு அதன் தலைவர்களுக்கு கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தீவிர வலதுசாரிகள் ஆட்சி
பிரான்ஸ் தேர்தலின் முதல் சுற்றில் National Rally கட்சி முன்னெடுத்த தீவிர வலதுசாரிகள் கூட்டணி 33 சதவிகித வாக்குகள் பெற்று முதலிடத்திற்கு வந்தது. மட்டுமின்றி, பிரான்சில் அடுத்து ஆட்சியமைக்க இருப்பதாக அதன் தலைவரான Marine Le Pen நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஜூலை 7ம் திகதி முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் தீவிர வலதுசாரிகள் கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்தனர். வெறும் 143 ஆசனங்களை மட்டுமே அந்த கூட்டணி கைப்பற்றியுள்ளது.
பிரான்சில் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் தீவிர வலதுசாரிகள் ஆட்சி அமையவிருக்கிறது என்ற தகவல் ஒருபக்கம் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்த, சுமார் ஒருவார காலம் பிரான்ஸ் தெருக்களில் வன்முறையும் கூச்சல் குழப்பங்களும் போராட்டங்களும் வெடிக்க காரணமாக அமைந்தது.
தேர்தலின் இரண்டாம் சுற்றில் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்றும் பிரான்சின் அடுத்த பிரதமராக Jordan Bardella பதவியேற்பார் என்றும் National Rally கட்சியின் Marine Le Pen நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
ஆனால் வெளியான முடிவுகள் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தீவிர வலதுசாரிகள் கூட்டணி மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வாக்குகள் சிதறாமல் இருக்க, வகுத்த திட்டத்தால் இரண்டாம் சுற்றில் 200க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகினர்.
இதுவே தீவிர வலதுசாரிகள் கூடணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. 2022ல் ஜனாதிபதி தேர்தலிலும் National Rally கட்சி ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோல்வியை சந்தித்தது.
தங்கள் பக்கம் மக்கள் ஆதரவு
அதிலிருந்து மீண்டு வந்து, தற்போது 143 ஆசனங்கள் என சாதனைப் படைத்துள்ளனர். வெற்றிக் கொண்டாட்டத்திற்காக National Rally கட்சியின் தலைமையகத்தில் வந்திருந்த 18 வயது ஆதரவாளர் ஒருவர் தெரிவிக்கையில்,
தேர்தல் முடிவுகள் ஏமாற்றமளிப்பதாகவும், இந்த முடிவுகள் பிரெஞ்சு மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதே கருத்தையே தீவிர வலதுசாரிகளின் Jordan Bardella-வும் பதிவு செய்துள்ளார்.
இடதுசாரிகள் கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ள அவர், இழிவான கூட்டணி அது என்றார். மேலும், National Rally கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் ஒளிவுமறைவின்றி, யூத எதிர்ப்பு, இனவெறி அல்லது தன்பாலின எதிர்ப்பு உள்ளிட்ட தங்களின் கொள்கைகளையே முன்வைத்துள்ளனர்.
தற்போது பின்னடைவை சந்தித்தாலும், தங்கள் பக்கம் மக்கள் ஆதரவு இருப்பதை இந்த தேர்தலும் வெளிப்படுத்தியுள்ளதாக கூறும் Marine Le Pen மீண்டும், நான்காவது முறையாக 2027ல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடயிருக்கிறார்.
தங்களின் வெற்றி கொஞ்சம் தாமதமடைந்துள்ளதாகவே அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி தொங்கு நாடாளுமன்றம் என்பது 2027 தேர்தலில் National Rally கட்சிக்கு புதிய வாய்ப்புகளை அளிக்கும் என்றே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |