உக்ரைனுக்கு பணம் கொடுத்துக்கொண்டே இருக்கமுடியாது... பிரான்சிலிருந்து ஒலிக்கும் ஒரு குரல்
France can no longer finance Ukraine, presidential frontrunner Le Pen says: பிரான்ஸ் தொடர்ந்து உக்ரைனுக்கு நிதி உதவி வழங்கிக்கொண்டே இருக்கமுடியாது என ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரான மரீன் லெ பென் கூறியுள்ளார்.
பிரான்ஸ் உக்ரைனுக்கு தொடர்ந்து பணம் கொடுத்துக்கொண்டே இருக்கமுடியாது என்று கூறியுள்ளார் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர்!
உக்ரைனுக்கு நிதி உதவி வழங்கிக்கொண்டே இருக்கமுடியாது
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அடுத்து ஜனாதிபதியாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது, வலதுசாரிக் கட்சியான National Rally கட்சியைச் சேர்ந்த மரீன் லெ பென்னுக்குத்தான் என கருதப்படுகிறது.

இந்நிலையில், மரீன் லெ பென், உக்ரைன் தொடர்பில் கருத்தொன்றைத் தெரிவித்துள்ளார்.
பிரான்சின் பொருளாதார வளர்ச்சி வலுவற்றதாக உள்ளது என்றும், நிதிப் பற்றாக்குறை அதிகமாக உள்ளது என்றும் கூறியுள்ளார் மரீன் லெ பென்.
பிரான்சின் பொருளாதாரமே மோசமாக இருக்கும் நிலையில், இனியும் பிரான்சால் தொடர்ந்து உக்ரைனுக்கு உதவ முடியாது என்று கூறியுள்ளார் அவர்.
ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் பேசிய மரீன் லெ பென், நாட்டின் அதிக பற்றாக்குறை மற்றும் பலவீனமான பொருளாதார வளர்ச்சியைச் சுட்டிக்காட்டி, இன்று பிரான்ஸ் மிகவும் அபாயகரமான சூழ்நிலையில் உள்ளது, ஆகவே, எங்களால் இனி உக்ரைனுக்கு நிதியுதவி அளிக்க முடியாது என்று கூறியுள்ளார்.