அந்த நாட்டு மக்கள் எப்போதுமே நமக்கு நண்பர்கள்தான்... தலைவர்கள்தான் பிரச்சினை: பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்
பிரித்தானியப் பிரதமர் போட்டியிலிருக்கும் லிஸ் ட்ரஸ்ஸிடம், பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் நண்பரா அல்லது எதிரியா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
மேக்ரான் நண்பரா அல்லது எதிரியா என்பது இன்னமும் முடிவாகவில்லை என்று பதிலளித்திருந்தார் லிஸ் ட்ரஸ்.
பிரித்தானிய மக்கள் எப்போதுமே பிரான்சுக்கு நண்பர்கள்தான் என்று கூறியுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.
பிரித்தானியா பிரான்சின் கூட்டாளி, அதன் மக்கள் எப்போதுமே பிரான்சின் நண்பர்களாகத்தான் இருப்பார்கள் என்று கூறியுள்ள இமானுவல் மேக்ரான், அவ்வப்போது அதன் தலைவர்கள்தான் ஏதாவது தவறு செய்துவிடுகிறார்கள் என்றார்.
பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் போட்டியில் இருக்கும் லிஸ் ட்ரஸ் மேக்ரான் குறித்து தெரிவித்த ஒரு கருத்து தொடர்பில் மேக்ரானிடம் கேள்வி எழுப்பபட்டபோது, ’பிரித்தானியா பிரான்சின் நட்பு நாடு என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று கூறினார் அவர்.
Photo Credit: AFP
பிரான்சும் பிரித்தானியாவும் தாங்கள் நண்பர்களா அல்லது எதிரிகளா என்பதைக் கூற இயலாவிட்டால், அப்போது நாம் பெரிய பிரச்சினையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம் என்று பொருள் என்றார் அவர்.
மேக்ரான் நண்பரா எதிரியா என்பது இன்னமும் முடிவாகவில்லை என, பிரித்தானிய பிரதமர் வேட்பாளர்களில் வெற்றியை நோக்கி நடைபோட்டுக்கொண்டிருக்கும் லிஸ் ட்ரஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.