சிறையிலிருந்தவண்ணம் முன்னிலை வகிக்கும் வேட்பாளர்: ஒரு சுவாரஸ்ய தகவல்
சிறையிலிருந்தவண்ணம் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர், வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
சிறையிலிருக்கும் வேட்பாளர்
இந்தியாவின் பஞ்சாபிலுள்ள, Khadoor Sahib தொகுதியில் காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளரான அம்ரித்பால் சிங் என்பவர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். விடயம் என்னவென்றால், அவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அசாமிலுள்ள Dibrugarh சிறையிலிருந்தவண்ணமே அவர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், சமீபத்திய தகவல்கள், அவர் 45,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கின்றன.
2023ஆம் ஆண்டு, சிங் தனது ஆதரவாளர் ஒருவரை விடுவிப்பதற்காக பொலிஸ் நிலையம் ஒன்றிற்குள் தனது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோருடன், வாள் மற்றும் துப்பாக்கிகளுடன் நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |