பிரித்தானியாவில் பயங்கர வெடி விபத்து.. நகரை சூழ்ந்த கரும்புகை! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவின் Leamington Spa பயங்கர தீ விபத்து ஏற்பட்டு நகரை கரும்புகை சூழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Juno Drive பகுதியில் உள்ள MKM Builders Merchants-ல் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பவயிடத்திற்கு அவசர சேவை குழுவினர் விரைந்துள்ள நிலையில், உள்ளூர்வாசிகள் வீட்டுக்குள் இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Juno Drive பகுதியில் பயங்கர வெடி சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கரும்புகையால் உள்ளூர் மக்கள் பலருக்கு தலைசுற்றல் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், சம்பவயிடத்திற்கு ஏர் ஆம்புலன்ஸ் விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Leamington Fire #fire pic.twitter.com/l2rIn8EyE0
— kevin straughton (@kevinstraughton) August 27, 2021
Juno Drive-ல் உள்ள ஒரு வளாகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் அவசர சேவை குழுவினர் ஈடுபட்டுள்ளனர் என உள்ளூர் காவல்துறை அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
Close up Video I've been sent. #leamingtonfire pic.twitter.com/JODDk15ZVR
— Leamington/Warwick/NEWS (@leamington_news) August 27, 2021
தற்போது நகரில் சாலைகள் மூடப்பட்டுள்ளன. தயவுசெய்து உள்ளூர்மக்கள் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்கமாறு காவல்துறையின்ர் வலியுறுத்தியுள்ளனர்.
#Breaking #Fire
— RawNews1st?? (@Raw_News1st) August 27, 2021
HUGE fire in Leamington Spa, UK, smoke seen FOR MILES - people told to stay indoors as emergency services rush to the scene. pic.twitter.com/HemY8q7TgF