பிரித்தானியாவில் அதிகம் வெறுக்கப்படும் மக்கள் இவர்கள் தான்... ஆய்வில் வெளியான தகவல்
பிரித்தானியாவில் அதிகம் வெறுக்கப்படும் மக்களில் முதலிடத்தில் ஜிப்சிகள் மற்றும் ஐரிஷ் பயணிகள் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை போக்கும் வகையில், ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் குறித்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
குறித்த ஆய்வில் மிகவும் பிரபலமற்ற சமூகங்களின் பட்டியலில் ஜிப்சிகள் மற்றும் ஐரிஷ் பயணிகளுக்கு அடுத்து இரண்டாமிடத்தில் இஸ்லாமியர்களே உள்ளனர்.
பர்மிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தனியார் நிறுவனத்துடன் இணைந்து குறித்த ஆய்வினை முன்னெடுத்துள்ளனர். இதில், இஸ்லாம், இலாமியர்கள், பிற இன மற்றும் மத சிறுபான்மையினர் தொடர்பில் பிரித்தானிய மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்வதே முதன்மை காரணமாக கூறப்படுகிறது.
குறித்த ஆய்வில் சுமார் 25.9% பிரித்தானிய மக்கள் இஸ்லாமியர்கள் மீது எதிர்மறையான உணர்வையே கொண்டுள்ளனர். இதில் 9.9% மக்கள் கடுமையான வெறுப்பு கொண்டுள்ளனர்.
ஆனால் குறித்த ஆய்வில் கலந்து கொண்ட பிரித்தானியர்களில் 44.6% பேர்கள் ஜிப்சிகள் மற்றும் ஐரிஷ் பயணிகளை வெறுப்பதாக குறிப்பிட்டுள்ளனர். 8.5% பேர்கள் யூத மக்கள் மீது வெறுப்புணர்வு இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
கருப்பின மக்கள் மீது 6.4% மக்கள் வெறுப்புணர்வு இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஜிப்சிகள் மற்றும் ஐரிஷ் பயணிகள் மீது பிரித்தானிய பொதுமக்களுக்கு வெறுப்புணர்வு ஏற்பட பாகுபாடு மட்டும் காரணமாக கூற முடியாது என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
மேலும், இஸ்லாமிய வெறுப்பு என்பது முஸ்லீம்களை குறிவைக்கும் இனவெறியின் ஒரு வடிவம் என்பதை உறுதி செய்வதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.