உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுக... தன் குடிமக்களுக்கு பிரான்ஸ் வலியுறுத்தல்
ஈரானில் இருக்கும் பிரான்ஸ் நாட்டவர்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.
பிரான்சிலிருந்து ஈரானுக்குச் சென்றுள்ள யாராக இருந்தாலும், கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்படும் அபாயம் ஈரானில் அதிக அளவில் காணப்படுவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு பிரான்ஸ் தன் குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.
காரணமில்லாமல் கைது செய்யப்படும் அபாயம் ஈரானில் நிலவுவதால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் தன் குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.
REUTERS//File Photo
பிரான்சிலிருந்து ஈரானுக்குச் சென்றுள்ள யாராக இருந்தாலும், இரட்டைக் குடியுரிமையுடையவர்கள் உட்பட, கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்படும் அபாயம் ஈரானில் அதிக அளவில் காணப்படுகிறது, நியாயமான விசாரணையையும் அந்நாட்டில் எதிர்பார்க்கமுடியாது என்று கூறியுள்ளது பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் தனது இணையதளத்தில்.
பிரெஞ்சுக் குடிமக்கள் இருவரை ஈரான் பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளதைத் தொடர்ந்து, ஈரான் சர்வாதிகார செயல்முறைகளைக் கடைப்பிடிப்பதாக பிரான்ஸ் சாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.