உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள்: பிரித்தானிய பிரதமர் வலியுறுத்தல்
லெபனானில் வாழும் பிரித்தானியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரித்தானிய பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் வலியுறுத்தல்
லெபனான் நாட்டை மையமாகக் கொண்டு செயலாற்றிவரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மோதல் மும்முரமடைந்துவரும் நிலையில், லெபனானில் வாழும் பிரித்தானியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரித்தானிய பிரதமர் கேய்ர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வாரத்தில் இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய தாக்குதலில், லெபனானில் 560க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில், இரு நாடுகளுக்குமிடையிலான மோதல் மும்முரமாகிவருகிறது.
இந்நிலையில், இது பிரித்தானியர்கள் லெபனானை விட்டு வெளியேறும் நேரம் என்று கூறியுள்ள பிரித்தானிய பிரதமர் கேய்ர் ஸ்டார்மர், பிரித்தானியர்களை உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், லெபனானுக்கு அருகிலுள்ள சைப்ரஸ் தீவில் பிரித்தானிய இராணுவ வீரர்கள், போர் விமானங்கள், கடற்படைக் கப்பல்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |