உடனே இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள்! பிரித்தானியா குடிமக்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை
மியான்மரில் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் ஆபத்தான முறையில் அதிகரித்து வருவதால் பிரித்தானியார்கள் உடனே அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு தனது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை செய்யக்கூடும் என்று ஐ.நா எச்சரிக்கையை தொடர்ந்து பிரித்தானியாவின் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மியானமரில் வன்முறை அதிகரித்து வருவதால் தங்க வேண்டிய அவசர தேவை இல்லாவிட்டால் பிரித்தானியர்கள் உடனே நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
இராணுவம் கையகப்படுத்துதல் மற்றும் வன்முறைகள் அதிகரித்து வருவதால் அரசியல் பதற்றம் மற்றும் அமைதியின்மை பரவலாக உள்ளது.
மியான்மரின் இராணுவம் சாதாரண வணிக பயணிகள் விமானச் சேவையை நிறுத்தியுள்ள நிலையில், மீட்பு விமானங்கள் இயங்குகின்றன, அவற்றில் பெரும்பாலானவை வணிக ரீதியாக முன்பதிவு செய்யப்படலாம்.
நாட்டை விட்டு வெளியேற முடியாதவர்கள் வீட்டுக்குள்ளே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுவதாகவும், அத்தியாவசிய காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தால் கூட்டத்தைத் தவிர்ப்பதாக வேண்டும் என பிரித்தானியா அறிவுறுத்தியுள்ளது.