உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுங்கள்... பிரித்தானியர்களுக்கு வெளியுறவுச் செயலர் வலியுறுத்தல்
உக்ரைனில் ரஷ்ய ஊடுருவல் தொடர்பான அச்சம் காரணமாக பதற்றம் நிலவும் நிலையில், உக்ரைனிலிருக்கும் பிரித்தானியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரித்தானிய வெளியுறவுச் செயலரான Liz Truss வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைனிலிருந்து பிரித்தானியாவுக்கு நேரடி விமான சேவை இருக்கும்போதே அங்கிருந்து வெளியேறிவிடுமாறு அவர் பிரித்தானியர்களை வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், உக்ரைனிலிருக்கும் பிரித்தானியர்களின் பாதுகாப்புதான் நமது முன்னுரிமை.
பிரித்தானியர்கள் அனைவரும், வர்த்தக ரீதியிலான விமான சேவைகள் பயன்பாட்டில் இருக்கும்போதே அவை மூலம் உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன், போக்குவரத்துச் செயலரான Grant Shappsம், உக்ரைனை விட்டு வெளியேறவேண்டும் என்ற வெளியுறவு அலுவலகத்தின் ஆலோசனையை பிரித்தானியர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். அதன்படி, உடனடியாக அவர்கள் விமான சேவைகளைப் பயன்படுத்திக்கொண்டு உக்ரைனை விட்டு வெளியேறவேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஒரு வாரத்துக்கும் மேலாகவே உக்ரைனுக்குப் பயணிப்பதற்கு எதிராக வெளியுறவு அலுவலகம் பிரித்தானியர்களுக்கு ஆலோசனை கூறிவருவது குறிப்பிடத்தக்கது.