தொட்டாற் சுருங்கி செடி தொட்டவுடன் இலைகள் ஏன் சுருங்குகின்றது?
தொட்டால் சிணுங்கியின் இலைகள் மற்ற தாவரங்களின் இலைகளைப் போலவே பல செல்களின் ஒருங்கிணைப்பால் ஆனவைதான்.
ஒவ்வொரு செல்லும் சில திரவப் பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த திரவத்தின் அழுத்தம் காரணமாக செல்களும், அவற்றாலான இலையும் உறுதியாக நிமிர்ந்திருக்க முடிகிறது.
இலையின் உயிரணுவி லிருந்து திரவம் வெளியேறி விட்டால், திரவ அழுத்தம் நீங்கி இலையின் உறுதித்தன்மை தளர்ந்துவிடும். புளிய மரம், வேலியோர முள் மரம், தூங்குமூஞ்சி மரம் போன்றவை இரவு நேரத்தில் சுருங்குவது இப்படித்தான்.
தொட்டால் சிணுங்கி இலையைத் தொடும்போது, அதன் தண்டுப் பகுதி ஒரு வகை அமிலத்தைச் சுரந்து இலையின் கீழ்ப்பகுதி செல்களில் உள்ள திரவத் தன்மையை நீக்கி விடுகிறது.
ஆனால் இலையின் மேற்பகுதி செல்களில் உள்ள திரவத்தன்மை நீங்குவது இல்லை. எனவே மேற்பகுதி இலையின் எடை காரணமாக, முழு இலையும் நெகிழ்ந்து வளைந்து கீழே தொங்கி விடுகிறது.