பிரித்தானியாவில் 16 வயது சிறுமிக்கு கத்திக்குத்து: 3 இளைஞர்கள் கைது
லீட்ஸில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 இளைஞர்கள் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட சிறுமி
லீட்ஸ் நகரின் ஆஸ்தோர்ப் பகுதியில் கென்னர்லீ அவென்யூ பகுதியில் கடந்த சனிக்கிழமை நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 16 வயது குளோயி வாட்சன் டிரான்ஸ்ஃபீல்ட்(Chole Watson Dransfield) பலத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார்.
அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

3 பேர் கைது
இந்த தாக்குதல் சம்பவத்தில் 18 வயது கெய்லா ஸ்மித் 19 வயது ஆர்ச்சி ரைக்ராப்ட் ஆகிய இருவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருவரும் லீட்ஸ் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இந்த கொலை சம்பவத்தில் மற்றொரு 18 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு பொலிஸார் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மற்றொரு 17 வயது சிறுவனின் பெயர் சட்ட காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை.
16 வயது சிறுமி குளோயி வாட்சன் உயிரிழந்த இடத்தில் அவரது நினைவாக ஏராளமானோர் மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |