பெருந்தொகை சம்பளத்தை உதறிவிட்டு... குடும்பத்தின் பட்டுப் புடவை வியாபாரத்தில் களமிறங்கிய தமிழச்சி: யார் இவர்
நல்லி பட்டுப் புடவைகள் நிறுவனத்தின் தற்போதைய துணை தலைவராக பொறுப்பில் இருப்பவர் தான் லாவண்யா நல்லி. நல்லி குழுமத்தின் ஐந்தாவது தலைமுறையை சேர்ந்தவர் லாவண்யா நல்லி.
நல்லி குழுமத்தின் துணை தலைவர்
2005ல் முதன் முறையாக நல்லி குழுமத்தில் பணியாற்ற முடிவு செய்த லாவண்யா, நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஹார்வாட்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டப்படிப்புக்காக சென்றார்.
படிப்பை முடித்து இரண்டு ஆண்டுகள் சிகாகோவில் McKinsey & Company நிறுவனத்தில் பணியாறியுள்ளார். 2016ல் இந்தியா திரும்பிய லாவண்யா, நல்லி குழுமத்தின் துணை தலைவராக பொறுப்பேற்றுள்ளதுடன், இணைய மூடான வணிகத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
39 வயதான லாவண்யா சில்லறை வர்த்தகத்தில் 18 ஆண்டு அனுபவம் ஈட்டியுள்ளார். தமது குடும்பத்திலேயே முதல் பெண்ணாக தொழிலில் களமிறங்கியுள்ளார்.
தற்போதைய சொத்து மதிப்பு ரூ 450 கோடி
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்றுள்ள லாவண்யா, 2005 மற்றும் 2009 காலகட்டத்தில் நல்லி குழுமத்தில் பணியாற்றும் போது, 14 கடைகளாக செயல்பட்டு வந்ததை 21 என அதிகரிக்க செய்ததுடன் வருவாய் அதிகரிக்கவும் வழி செய்துள்ளார்.
1928ல் நிறுவப்பட்ட நல்லி பட்டுப் புடவைகள் குழுமத்தின் தற்போதைய சொத்து மதிப்பு என்பது ரூ 450 கோடி என்றே கூறப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பெருநகரங்கள் பலவற்றில் நல்லி பட்டுப் புடவைகள் கடை செயல்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |